News December 17, 2024
இனி அரசு பணி தேர்வுகளை NTA நடத்தாது: தர்மேந்திர பிரதான்

தேசிய தேர்வு முகமை (NTA) இனி உயர்க்கல்வி நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “2025 முதல் எந்த அரசு பணிக்கான தேர்வுகளையும் NTA நடத்தாது. எதிர்காலத்தில் கணினி & தொழில்நுட்பம் சார்ந்து நுழைவுத் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. 2025இல் NTA மறுசீரமைக்கப்படும். குறைந்தது 10 புதிய பதவிகள் உருவாக்கப்படும்” என்றார்.
Similar News
News September 6, 2025
பாண்ட்யா சகோதரர்களின் நல்ல எண்ணம்

பாண்ட்யா சகோதரர்கள் செய்த நல்ல காரியங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தங்களது சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்திர சிங்கிற்கு இருவரும் சேர்ந்து ₹80 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜிதேந்திர சிங் கூறும்போது, ₹20 லட்சம் மதிப்பில் கார், சகோதரியின் திருமணத்திற்கு ₹20 லட்சம், தாயின் மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு ₹18 லட்சம் தந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
News September 6, 2025
மாணவர்கள் பையில் காண்டம்ஸ், கத்தி… அதிர்ச்சி!

அகமதாபாத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்களின் பைகளை பரிசோதித்த ஆசிரியர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம், பைகளில் நோட்டு புத்தகங்கள் தவிர காண்டம்ஸ், கருத்தடை மாத்திரைகள், ஆல்கஹால், ஆபாச புத்தகங்கள், பணம், ஆடம்பர பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் இருந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம், சிறுவயதிலேயே ஆன்லைனில் தேவையில்லாத நிறைய விஷயங்களை குழந்தைகள் பார்ப்பதுதான் என உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
News September 6, 2025
இவைதான் இந்தியாவின் விலை உயர்ந்த விஷயங்கள்!

பொதுவாக உலகளவில் பிராண்டட் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அவை சற்று மாறுபடுகின்றன. இங்கு கழுதைப்பாலில் தொடங்கி தேயிலை வரை, அதன் சிறப்புத் தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகவிலை கொண்ட பொருள்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்தியதை கமெண்ட் பண்ணுங்க.