News April 18, 2025
இனி GST நம்பர் உடனடியாக கிடைக்கும்

GST-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாள்களுக்குள் நம்பரை வழங்க வேண்டும் என்று CBIC உத்தரவிட்டுள்ளது. GST-க்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் அதிகாரிகள் தேவையற்ற ஆவணங்களை கேட்டு அலைக்கழிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, 7 நாள்களுக்குள் ரெஜிஸ்டிரேஷனை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பறந்துள்ளது. சந்தேகத்திற்குரிய விண்ணப்பங்களுக்கு மட்டும் 30 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 30, தை 16 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News January 30, 2026
ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு!

கடவுளை கேலி செய்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது பெங்களூரு போலீஸ் FIR பதிவு செய்துள்ளது. கோவாவில் கடந்தாண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தது சர்ச்சையானது. இதுகுறித்து அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
News January 30, 2026
விராட் கோலியை காணவில்லை என ரசிகர்கள் புகார்!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை காணவில்லை என்ற ஸ்கிரீன் ஷாட்களை ரசிகர்கள் SM இல் பதிவிட்டு வருகின்றனர். கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதா அல்லது கோலி தானே இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினாரா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அவரை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


