News January 8, 2025
இனி அரசு கேபிளில் HDல் TV பார்க்கலாம்!

தமிழகத்தில் HD Setup Box பணி வழங்கும் பணி நடந்து வருவதாக அரசு கேபிள் TV நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த Setup Box தேவைப்படும் ஆபரேட்டர்கள் ₹500 Deposit செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், அரசு கேபிள் TVஇன் SD Setup Boxகளை ஒப்படைக்க வேண்டும். தவறினால், அப்பகுதியில் புதிய ஆபரேட்டர்கள் நியமிக்கப்படுவர். புதிய ஆபரேட்டர்களாக பதிவு செய்ய www.tactv.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.
Similar News
News January 21, 2026
கணவன் நாக்கை கடித்து துப்பிய மனைவி

கணவன் மனைவிக்குள் சின்னச் சின்னச் சண்டைகள் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த சண்டை அடுத்த நில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால், உ.பி.யில், திருமணமாகி ஓராண்டு முடிவதற்குள் கணவனின் நாக்கை கடித்து துப்பியிருக்கிறார் மனைவி. காசியாபாத்தை சேர்ந்த விபின் தினமும் முட்டை குழம்பா என கேட்டதற்கு, ஆத்திரமடைந்த மனைவி இஷா, தனது பற்களால் கணவனின் நாக்கை துண்டித்துள்ளார்.தற்போது, இஷாவை போலீசார் கைது செய்தனர்.
News January 21, 2026
செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலகலா? EXPLANATION

தவெகவில் இருந்து <<18906535>>செங்கோட்டையன் விலக<<>> இருப்பதாக பரவிய செய்திக்கு புஸ்ஸி ஆனந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பனையூரில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எனக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக செய்தி போடுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், எங்களை பொறுத்தவரை விஜய்யின் கீழ் அனைவருமே தொண்டர்கள்தான் என கூறினார்.
News January 21, 2026
முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க… 4 ஈஸி டிப்ஸ்!

இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் விழ மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன. இதை சரி செய்யவே முடியாதா என நீங்கள் வருந்தவேண்டாம். ▶இதற்கு, இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை கொண்டு 5 நிமிடங்கள் முகத்தை மசாஜ் செய்யுங்கள் ▶வாழைப்பழம் / பப்பாளி சாறை முகத்தில் தடவுங்கள் ▶தேங்காய் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்வது சிறந்தது ▶மன அழுத்தத்தை குறைப்பதும் அவசியம். SHARE.


