News September 30, 2025
இனி வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டை பெறலாம்

இனி ஆதார் அட்டை பெற இ-சேவை மையங்கள் செல்ல தேவையில்லை. MyGov உதவி மைய எண்ணான +91-9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் Save செய்யுங்கள். இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். பின்னர், அதில் வரும் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்திருப்பது அவசியம்.
Similar News
News December 8, 2025
தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
News December 8, 2025
‘பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000’

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுத்தால் பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்கலாம் என EPS தெரிவித்துள்ளார். KN நேரு ₹1,020 கோடி வரை <<18501393>>ஊழல் செய்ததாக ED கூறியுள்ளதை<<>> சுட்டிக்காட்டி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நயினார் நாகேந்திரனும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வலியுறுத்தியிருந்தார். பொங்கல் பரிசுத்தொகை குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.
News December 8, 2025
இதை விட கேவலமான விஷயம் இல்லை: அமைச்சர்

உலகத்திலேயே சொந்தமாக ஏர்லைன்ஸ் இல்லாத ஒரே நாடு இந்தியாதான் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதை விட கேவலமான விஷயம் ஒன்று இல்லை என விமர்சித்த அவர், இங்கிருக்கும் மதுரைக்கு செல்ல ₹50 ஆயிரம் கேட்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பிளைட் வேண்டாம் என டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, ரயில், பஸ்ஸில் செல்ல அவர் முடிவெடுத்ததாகவும் அவர் நகைச்சுவையாக பேசியுள்ளார்.


