News August 26, 2025
இனி 90% தங்க நகைக் கடன் கிடைக்கும்..!

<<17503903>>தங்க நகைகளுக்கு 90% கடன்<<>> வழங்குவதாக சவுத் இந்தியன் வங்கி அறிவித்தது. இதற்காக, SIB GOLD EXPRESS என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகள் அவகாசத்துடன் ₹25,000 முதல் ₹25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவணையாக இல்லாமல் இதனை எந்த நேரத்திலும் திருப்பி செலுத்தலாம். சிறு தொழில்முனைவோர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி தொடங்கியுள்ளது. SHARE IT.
Similar News
News August 26, 2025
உடல் எடை குறைக்க விரைவில் தேசிய நெறிமுறைகள்

இந்தியர்களிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரிப்பது குறித்து சுதந்திர தின உரையில் PM மோடி கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், விரைவில் தேசிய உடல் எடை குறைப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் பருமனை முன்கூட்டியே கண்டறிந்து, கண்காணித்து, சிகிச்சை அளிக்கும் வகையில் நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
News August 26, 2025
காதலன் கண் முன்னே உயிரை விட்ட காதலி.. பெரும் சோகம்

சென்னையில் காதலன் திருமணத்தை நிறுத்தியதால், காதலி தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஹர்சிதா, தர்ஷன் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாட்டால் திருமணத்தை தர்ஷன் நிறுத்தினார். அவரது வீட்டிற்குச் சென்ற ஹர்சிதா, சமாதானம் செய்ய முயன்றும் பயனில்லை. இதனால், அங்குள்ள மொட்டை மாடியில் இருந்து குதித்து அவர் உயிரை விட்டுள்ளார். RIP
News August 26, 2025
SPACE: விண்வெளியில் இதெல்லாம் செய்ய முடியாதா?

பூமியில் நாம் சர்வ சாதாரணமாக செய்யும் சில விஷயங்களை விண்வெளியில் செய்யமுடியாது. அவை என்ன என்பதை பார்ப்போம்▶விண்வெளியில் அழுதால் கண்ணீர் கீழே சிந்தாது, மிதக்கும் ▶நெருப்பு உண்டாக்கி சமைக்க முடியாது ▶குளிக்க முடியாது ▶ஈர்ப்பு விசை இல்லாததால் பறந்துகொண்டே தான் தூங்கமுடியும் ▶Gravity இல்லாததால் ஏப்பம் விடும்போது சிறிது நீர் வெளியேரும் என்பதால் நிம்மதியாக ஏப்பம் கூட விட முடியாது. SHARE.