News October 6, 2025
இனி வெள்ளம், கனமழைக்கும் இன்சூரன்ஸ்.. உடனே பணம்!

வெள்ளம், கனமழை, வெப்ப அலை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்குவது தொடர்பாக, காப்பீடு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், இனி நமது உடமைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். இது வழக்கமான காப்பீடாக இல்லாமல், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட உடனே பணம் கிடைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News October 7, 2025
பாகிஸ்தானின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேறும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை கவனித்தால், இந்தியா எப்படி ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது என்பதை உணர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் தற்போதைய சூழலை பார்க்கும் போது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
‘மதகஜராஜா’ காம்போவில் இணைந்த கயாடு?

சுந்தர் C இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கயாடு லோஹர் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் இருப்பதாகவும், இன்னொரு ஹீரோயின் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பரில் தொடங்கி 3 மாதங்களில் முடிக்க சுந்தர் C திட்டமிட்டுள்ளாராம். தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
News October 7, 2025
ARATTAI-யில் இதை கவனிச்சீங்களா?

வாட்ஸ்ஆப்புக்கு மாற்றான இந்திய தயாரிப்பு என்று களமிறங்கிய ZOHO-வின் ‘அரட்டை’ செயலிக்கு உண்மையிலேயே செம வரவேற்பு கிடைத்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் உள்ளது போலவே இதிலும் வாய்ஸ் / வீடியோ கால், end-to-end என்கிரிப்ஷன் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், பயனரின் மெசேஜ்களை ZOHO தன் சர்வரில் சேமித்து வைக்கிறது என Money Control செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இது தனியுரிமை பாதுகாப்பை பாதிக்கக் கூடும்.