News December 24, 2024
இனி இந்த மாணவிகளுக்கும் மாதம் ₹1000

புதுமைப் பெண் திட்டத்தை டிசம்பர் 30ஆம் தேதி தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தற்போது, இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இதனை 30ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இனி அவர்களும் மாதம் ₹1000 பெறலாம்.
Similar News
News September 7, 2025
₹200 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா’

இந்தியாவின் முதல் ‘Super Women’ படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’, விரைவில் ₹200 கோடி வசூலை எட்ட உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இப்படம், இதுவரை உலகம் முழுவதும் ₹175+ கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹30 கோடி பட்ஜெட்டில் துல்கர் சல்மான் தயாரித்த இப்படத்தை, டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
News September 7, 2025
நாளை பள்ளி ஆசிரியர்கள் தயாரா இருங்க!

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை(செப்.8) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் trb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கான தேர்வு நவம்பரில் நடைபெற உள்ளது. SHARE IT.
News September 7, 2025
CM ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பிளான்

ஜெர்மனி, இங்கிலாந்தில் முதலீடுகளை ஈர்க்க சென்ற CM ஸ்டாலின் முன்னிலையில், ₹15,516 கோடி தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து லண்டனில் இருந்து இன்று ஸ்டாலின் புறப்படுகிறார். நாளை காலை 7.30 மணிக்கு சென்னை திரும்பும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து கத்திப்பாரா வரை இந்த வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.