News April 11, 2025
இனி தியேட்டரிலும் மது விற்பனை.. வரும் புது திட்டம்!

குடும்பமாக அமர்ந்து, ஒன்றாக சிரித்து மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வரும் இடமே தியேட்டர். அம்மாதிரியான பொது இடத்தில், மது விற்பனை செய்ய PVR – INOX உரிமம் கேட்டுள்ளதாம். இது பெரிய மெட்ரோ நகரங்களில் ரசிகர்களை ஈர்க்க செய்யப்போகும் ஸ்டேட்டர்ஜி என விளக்கமளிக்கின்றனர். ஆனால், வெளியில் இருந்து வாங்கிட்டு வரக்கூடாது. அவர்களே தியேட்டரில் விற்பனை செய்வார்களாம். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News November 30, 2025
அதிகாரப் பங்கிற்கு வாய்ப்பு இல்லை: விசிக MP

ஒரு வலிமையான கட்சி பலவீனமடையும் போதுதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு வரும் என விசிக MP ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால் திமுக தற்போது வலிமையான கட்சியாக இருப்பதாகவும், அதனால் அதிகாரப் பகிர்வுக்கான வாய்ப்பு இந்த தேர்தலில் இருக்காது என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், விசிக தற்போது பலமடங்கு வளர்ந்திருப்பதால் இம்முறை கூடுதல் தொகுதிகளை திமுக கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
BREAKING: விலை தடாலடியாக மாறியது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹3 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹106-க்கும், முட்டைக்கோழி ₹122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.
News November 30, 2025
Op Sindoor 2.0-வுக்கு ரெடி: BSF டிஐஜி

Op Sindoor-க்கு பிறகு, பாக்., எல்லையிலிருந்த 72 பயங்கரவாத ஏவுதளங்கள் தொலைதூர பகுதிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக BSF டிஐஜி விக்ரம் குன்வர் தெரிவித்துள்ளார். முன்னதாக JeM, LeT பயங்கரவாதிகள் தனித்தனியாக இயங்கியதாகவும், தற்போது அவர்கள் கூட்டாக பயிற்சி எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசு உத்தரவிட்டால் Sindoor 2.0-க்கு ரெடி எனவும், இம்முறை பலமடங்கு சேதத்தை ஏற்படுத்துவோம் என்றும் பேசியுள்ளார்.


