News November 23, 2024
TNPSC தேர்வில் இனி கருப்பு மட்டுமே..

தேர்வர்கள் தேர்வுக்கு கருப்பு மைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென TNPSC அறிவுறுத்தியுள்ளது. விடைப்புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல் போன்றவற்றுக்கு ஒரே வகையான கருப்பு மைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கருப்பு மைப் பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால், விடைத்தாள் செல்லாததாகிவிடும்.
Similar News
News October 25, 2025
இந்தியா அழுத்தத்திற்கு பணியாது: பியூஷ் கோயல்

அழுத்தத்திற்கு பணிந்து அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் அணுகுமுறை நீண்டகால தொலைநோக்கு பார்வையை கொண்டது எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பை கடந்து செயலாற்றுவது எப்படி என யோசித்து வருவதாகவும், புதிய சந்தைகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
ராசி பலன்கள் (25.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 25, 2025
பேப்பரில் பொட்டலம் கட்டிய உணவுகளை சாப்பிடலாமா?

செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டப்படும் உணவுப் பொருள்களை உட்கொள்வது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரியல் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருள்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.


