News April 21, 2025
இனி டிரைவர், கண்டக்டரும் பயோமெட்ரிக் வைக்கணும்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம் என்று TNSTC அறிவித்துள்ளது. ஊழியர்கள் சிலர் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும்; இதை கணக்கிட்டு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என கூறியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
Similar News
News April 21, 2025
வரிகளை குறைப்பாரா ஜே.டி.வான்ஸ்?

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் இந்திய வருகை இரு தரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பது குறித்து ஜே.டி.வான்ஸிடம் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என வெளியுறவு செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
தொடங்கிய டிக்கெட் விற்பனை… CSK ரசிகர்கள் ஆர்வம்

சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்து நடக்க உள்ள 6 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே வரும் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணி, ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
பெண்கள் முன்பு நிர்வாணம்: இளைஞர் அதிரடி கைது!

சென்னை வியாசர்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியின் முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாச சைகையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் பலர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். பின்னர், அவரை பிடிக்க பரிசுத் தொகை அறிவித்து தேடி வந்த நிலையில், முனுசாமி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.