News May 17, 2024
இனி அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்

மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின் தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய சேவைகளை பெற நேரில் செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 6, 2025
டெல்லியிடம் ராமதாஸ் வைக்கும் டிமாண்ட்?

பாமகவில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. அப்போது, எந்தப் பக்கம் கூட்டணி சென்றாலும் 20 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒப்புக்கொண்டு அதை எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என ராமதாஸ் கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி டெல்லிக்கு பச்சை சிக்னல் காட்டியிருக்கும் ராமதாஸ் தரப்பு, அதுதொடர்பான பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக உள்ளதாக தைலாபுர வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
News November 6, 2025
டிரம்ப்பின் வரிக்கு எதிராக தொடங்கிய USA SC விசாரணை

USA அதிபர் டிரம்ப், சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீது விதித்த அதிகப்படியான சுங்க வரிகள் சட்டப்படி சரியா என்ற வழக்கை USA சுப்ரீம் கோர்ட் நேற்று விசாரிக்க தொடங்கியது. அதிகளவில் வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை எனவும், USA நாடாளுமன்றமான Congress-க்கு மட்டுமே உள்ளது என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது, USA வர்த்தக கொள்கையில் அதிபர் மற்றும் Congress-ன் அதிகார சமநிலையை மாற்றும் என கூறப்படுகிறது.
News November 6, 2025
மூட்டி வலி நீங்க இந்த கஷாயம் குடிங்க!

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க இந்த கஷாயத்தை பருகும் படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ◆தேவை: வரமல்லி, சீரகம், சோம்பு ◆செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் தண்ணீரில் போட்டு, மிதமான தீயில் 3-5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி காலையில் குடித்து வந்தால், மூட்டு வலியை நீக்குவதுடன், அஜீரண கோளாறில் இருந்தும் நிவாரணம் பெறலாம். அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.


