News March 30, 2025

இனி 2 முழு ஆண்டு தேர்வு.. CBSE 10ம் வகுப்பில் அறிமுகம்

image

10,12ம் வகுப்புக்கு 2025-26ம் கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை CBSE வெளியிட்டுள்ளது. அதில் 10ம் வகுப்புக்கு இனி பிப்ரவரி, ஏப்ரலில் 2 முழு ஆண்டு தேர்வு எனக் கூறப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கு 80 மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும். மீதியுள்ள 20 மதிப்பெண்கள் இன்டர்னல் ASSESSMENT மூலம் அளிக்கப்படும். குறைந்தது 33% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 1, 2025

பெண் கூட்டு பலாத்காரம்: ஹைதராபாத்தில் கொடூரம்

image

ஹைதராபாத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹாடிஷரிப் என்ற இடத்தில் லிப்ட் தருவதாக கூறி வாகனத்தில் ஏற்றிய ஒரு கும்பல், நடுவழியில் வைத்து அப்பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

News April 1, 2025

அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலைக்கு கல்தா?

image

2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமையலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது. அப்படி கூட்டணி அமைந்தால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்கக்கூடாது என அதிமுக விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதனால் அண்ணாமலையை மாற்றிவிட்டு, அதிமுக தலைமைக்கு நெருக்கமான எல்.முருகன், நயினார் நாகேந்திரன் போன்றவர்களில் யாரேனும் ஒருவரை தலைவராக்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

News April 1, 2025

பிரிட்டிஷ் பள்ளிகளில் திரையிட உள்ள பிரபல சீரிஸ்

image

பதின் பருவத்தில் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் சிக்கல்களை விவரிக்கும் படமாக அடலசன்ஸ் சீரிஸ் உருவானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் அடலசன்ஸ் சீரிஸை திரையிட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. பாலியல் மாற்றங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் நன்றாக தெரிந்து கொள்ள இப்படம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!