News November 12, 2024
நவம்பர் 12: வரலாற்றில் இன்று

1927 – மகாத்மா காந்தி, இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1970 – போலா சூறாவளி கிழக்கு பாகிஸ்தானை (இன்றைய வங்காளதேசம்) தாக்கியதில் 5 லட்சம் பேர் வரை இறந்தனர்.
1980 – நாசாவின் விண்கலன் வொயேஜர்-1, சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
நவம்பர் 12 – உலக நுரையீரல் அழற்சி நாள்.
Similar News
News August 24, 2025
இதுக்கு சரியாக பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. நீங்கள் இந்த நான்கு ‘9’ எண்களுக்கு நடுவே, +, -, × or ÷ என எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால், 100 என்பதை சரியாக நிரூபிக்க வேண்டும். பார்க்க கஷ்டமாக இருந்தாலும், ரொம்ப ஈசி. எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம்.
News August 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

ஆக.28-ம் தேதியுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்டு 45 நாள்கள் நிறைவடைகிறது. இதனால், முதல் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப நிலையை அறிய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்னும் 4 நாள்களுக்குள் நல்ல செய்தி வரப் போகிறதாம்.
News August 24, 2025
இன்று இரவு 7 மணிக்கு தயாரா இருங்க!

சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்துள்ள படத்தில், வித்யூத் ஜம்வால் வில்லனாக மிரட்டவுள்ளார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று சென்னை தனியார் கல்லூரியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.