News September 3, 2025
நாவல் to சினிமா: படங்களின் லிஸ்ட்

சினிமாவிற்கும், இலக்கியத்திற்கும் ஒரு ஆழமான நட்புறவு இருந்து கொண்டே தான் இருக்கிறது. என்னதான் சொந்த அனுபவங்களை திரைக்கதையாக மாற்றி இயக்குநர்கள் படங்களை உருவாக்கினாலும், அவ்வப்போது நாவல்களில் இருந்தும் படங்கள் பரிணமிக்கின்றன. அந்த வகையில், நாவலை மையமாக வைத்து உருவான படங்களின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம். இதில் விடுபட்ட படங்கள், உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News September 3, 2025
நேருவின் பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை

முன்னாள் PM நேருவின் பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் LBZ பகுதியில் 3.7 ஏக்கரில் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது. இந்த பங்களா, ராஜஸ்தான் அரசு குடும்பத்திற்கு சொந்தமானது. இந்த பங்களாவிற்கு ₹1,400 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 2024 முதல் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது இதை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
News September 3, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

செப்.5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மிலாடி நபியையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இம்மாதத்தில் காலாண்டு தேர்வுகள் வருவதால் மாணவர்கள் பரீட்சைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். சொந்த ஊர் செல்ல நினைப்பவர்களுக்காக அரசு ஸ்பெஷல் பஸ்களையும் இயக்கி வருகிறது. SHARE IT.
News September 3, 2025
அணுகுண்டை விட 200 மடங்கு powerful.. சீனாவின் ஏவுகணை

சீனாவின் <<17598250>>Victory Parade-ல்<<>> நேற்று இடம்பெற்ற, அதன் அணு ஆயுத ஏவுகணை அதிக கவனம் ஈர்த்துள்ளது. DF-5C என்று பெயரிடப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 20,000 கிமீ என்பதால், உலகின் எந்த மூலையிலும் தாக்குதல் நடத்த முடியுமாம். இது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட 200 மடங்கு சக்திவாய்ந்ததாம். இந்த ஆயுத அணிவகுப்பே, ‘கிட்ட வராதே’ என்று அமெரிக்காவை எச்சரிக்க தானாம்.