News October 21, 2025
நவ.1 கடைசிநாள்.. சீனா மீது 155% வரி: டிரம்ப் வார்னிங்

வரும் நவ.1-ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாவிட்டால், சீனா மீது 155% வரிவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எனவும், இம்மாத இறுதியில் சீன அதிபரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 21, 2025
அதிமுக, திமுக மோதலுக்கு ஆந்திர அமைச்சர் பதில்

ஆந்திராவில் கூகுள் AI மையம் அமைவது தொடர்பான அதிமுக, திமுகவின் மோதலுக்கு, அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் பதிலளித்துள்ளார். தமிழரான கூகுள் CEO-ஐ முறையாக அணுக அரசு தவறிவிட்டதாக அதிமுக சாடிய நிலையில், பாஜக அழுத்தத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் TN புறக்கணிக்கப்படுவதாக திமுக பதிலளித்தது. இதில், சுந்தர் பிச்சை இந்தியாவை (மாநிலம் பார்க்காமல்) தேர்வு செய்துள்ளதாக நர லோகேஷ் X-ல் பதிவிட்டுள்ளார்.
News October 21, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 21, 2025
வீட்டில் நல்லதே நடக்க இதை செய்யுங்க..

வீட்டில் நன்மை பெருகவும், தீமை ஒழியவும் படிகார கல் போதுமானது என்று நம்பப்படுகிறது. தொழில் வளர்ச்சி முதல் குழந்தைகளின் கல்வி வரை பலவற்றுக்கும், இந்த படிகார கற்களை வேத காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். புகைப்படங்களை SWIPE செய்து என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.