News June 27, 2024
நெல்லை கலெக்டர் அறிவிப்பு

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நலவாரியத்தில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்ப படிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
தூத்துக்குடி: மனைவி பிரிந்த சோகத்தால் கணவர் தற்கொலை

மானூர் அருகே அலவந்தான்குளத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பெல்கிஸ் (51). இவருக்கும் இவரது மனைவி அந்தோணியம்மாளுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவந்தார். மனைவியை பிரிந்த சோகத்தில் பெல்கிஸ் கடந்த 10ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர் நெல்லை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News December 12, 2025
நெல்லை: திருநங்கைகள் கோஷ்டி மோதல்

பாளை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு திருநங்கைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலை, இரவு நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
News December 12, 2025
நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

திருநெல்வேலி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <


