News March 17, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச்.18 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் நடைபெறாது என பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் , ஆட்சியருமான ஏ.பி மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
மயிலாடுதுறை: போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
மயிலாடுதுறையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 13-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் முதன்மை மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள் மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பேசி சமரசம் செய்து கொள்ளலாம் என சட்டப்பணி குழு தலைவர் நீதிபதி சுதா தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
மயிலாடுதுறை: பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து

கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் பகுதியில் பைபாஸ் சாலையில், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, காரின் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியதில், முன் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


