News August 5, 2024

இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

image

இடஒதுக்கீட்டு எதிரான போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால், 8801958383679/80, 8801937400591 ஆகிய தொலைபேசி உதவி எண்கள் மூலம் தலைநகர் தாக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News March 29, 2026

புதுவை: தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

புதுவையில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு (9.4.2026) அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கை சுதந்திரமாக செலுத்த இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் தேர்தல் நாளில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News March 29, 2026

மகளிர் உரிமைத்தொகை ₹2000- ஆக உயர்த்தப்படும்: ஸ்டாலின்

image

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை CM ஸ்டாலின் வெளியிட்டார். * காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். * மகளிர் உரிமைத்தொகை ₹2000- ஆக உயர்த்தப்படும்.* விவசாயிகளுக்கு எந்த வித மீட்டர்களும் பொருத்தப்படாத நவீன பம்பு செட் வழங்கப்படும் * முதல்வர் காப்பீடு திட்டத்திற்கான ஆண்டு குடும்ப வருமான வரம்பு ₹5 லட்சமாகவும், காப்பீடு தொகை ₹10 லட்சமாகவும் உயர்த்தப்படும்

News March 29, 2026

வங்கி கணக்கில் ₹12,000.. ஸ்டாலின் புதிதாக அறிவித்தார்

image

திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதில், *மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹8,000-ல் இருந்து ₹12,000 ஆக உயர்த்தப்படும். *மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ₹1,500-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தப்படும். *முதியோர் உதவித்தொகை ₹2,000 ஆக உயர்வு. *மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹5 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.

error: Content is protected !!