News March 16, 2024

4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

image

ஆந்திரா, அருணாச்சல் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா மாநில சட்டசபைகளுக்கு மே மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 4 மாநில சட்டசபைகளுக்கும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஜூன் மாதம் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

Similar News

News February 18, 2026

திருச்சி, தஞ்சைக்கு வருகை தரும் PM மோடி

image

வரும் மார்ச்சில் PM மோடி, 3 முறை TN வரவுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 1-ல் மதுரையில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மார்ச் 6-ம் தேதி வேலூர் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் மார்ச் 11-ல் திருச்சி, தஞ்சை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி PM மோடியின் அடுத்தடுத்த தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

News February 18, 2026

Election: தமிழகம் வருகிறார் ஞானேஷ் குமார்

image

CEC ஞானேஷ் குமார், பிப்.26, 27-ல் தமிழகம் வரவிருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு, மாநில தேர்தல் அதிகாரிகள், சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

News February 18, 2026

ராகுல் காந்தி ஆபத்தானவர்: கிரண் ரிஜிஜு

image

ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானவர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். ராகுல் காந்தி தேச விரோத சக்திகளான நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்திப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், ராகுல் வெளிநாட்டில் <<14831061>>ஜார்ஜ் சோரோஸ்<<>> போன்ற நபர்களை சந்தித்து, நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!