News March 29, 2024
ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி காங்கிரஸுக்கு நோட்டீஸ்

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை, இதற்கு ரூ.1,700 கோடி செலுத்தும்படி ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியிருப்பது காங்கிரசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Similar News
News December 6, 2025
நம்பிக்கைகளை தீர்ப்பில் காட்டக்கூடாது: பெ.சண்முகம்

அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்டுதான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும் என சிபிஎம் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பற்றி பேசிய அவர், நீதிபதிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது என விமர்சித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News December 6, 2025
BREAKING: இந்தியா பந்துவீச்சு

தெ.ஆப்., அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கோலி, ருதுராஜ், கே.எல்.ராகுல், ஜடேஜா, குல்தீப், ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடரை பறிகொடுத்த நிலையில், இந்தியா கடைசி போட்டியான இன்று வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கவுள்ளது.
News December 6, 2025
முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.


