News March 10, 2025
வரிப் பகிர்வு குறித்து விவாதிக்க விசிக ஒத்திவைப்பு நோட்டீஸ்

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், மாநிலங்களுக்கான வரி பகிர்வை 40% ஆக குறைக்க 16வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. GST, செஸ் போன்றவற்றால் மாநிலங்களின் வருவாய் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டி, வரி பகிர்வை குறைக்க நினைப்பது நியாயம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 10, 2025
விமர்சித்தவரையே பாராட்ட வைத்த ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட்டு வீரருக்கான தோற்றத்தில் இல்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்திருந்தார். இதையடுத்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்ற நிலையில் ரோகித்துக்கு ஷாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ரோகித் வழிவகுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2025
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 5 பேர் பலி!

மும்பையின் நக்படா பகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஹசிபல் ஷேக், ராஜா ஷேக், ஜியாவுல்லா ஷேக், ஹிமாந்த் ஷேக் ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சைப் பலனின்றி பர்ஹான் ஷேக் இன்று மரணமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விஷவாயு தாக்கியது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2025
நீங்க டெய்லி தலைக்கு குளிக்கும் பழக்கம் இருப்பவரா?

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு 4 முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தூசி, அழுக்கு, மாசு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், தினமும் தலைக்கு குளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அழுக்கு அதிகமாகப் படிவது, முடியின் ஆரோக்கியத்திற்கு கேடு. சம்மர் சீசனில், உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் வாரத்திற்கு நான்கு முறை குளித்து விடுங்கள். SHARE IT.