News March 17, 2024
அறிவிப்பு: 15 துணை கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட 15 துணைக் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய் துறை செயலாளர் ராஜா ராமன் பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துகிருஷ்ணன் மதுரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 6, 2025
நெல்லை: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

நெல்லை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <
News December 6, 2025
நெல்லை: விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த முத்தரசு என்பவருடைய மகள் பரமேஸ்வரி (28). இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்தார். அவரை மீட்டு பாளை ஜகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரசிங்கபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
நெல்லை போலீசின் பாராட்டை பெற்ற டீக்கடைகாரர்

சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57) என்பவர் 30.11.2025 அன்று தனது கடையின் முன்பு, ஒரு பேக்கில் ரூ. 2,50,000/- பணம் கேட்பாரற்று நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அந்த பேக்கை எடுத்து, உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வந்து நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இன்று எஸ்பி சிலம்பரசன் நேரில் பாராட்டினார்.


