News April 11, 2025
பிரபல தொழிலதிபர் மதுர் பஜாஜ் காலமானார்

நாட்டின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான மதுர் பஜாஜ் (73) காலமானார். பஜாஜ் குழுமத்தின் நிறுவனரான ஜமன்லால் பஜாஜின் பேரனான இவர், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வைஸ் சேர்மனாக இருந்தார். மேலும், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிற பஜாஜ் நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலும் இருந்துள்ளார். இவரின் மறைவுக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Similar News
News April 18, 2025
IPL: RCB முதலில் பேட்டிங்

PBKS, RCB அணிகள் மோதும் இன்றைய IPL போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்று RCB அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களில் இருக்கும் அணிகள் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெல்லும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும்.
News April 18, 2025
அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி?

பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும், அண்மையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவை இதுதொடர்பாக பிரதமர் மோடி சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல மத்திய அமைச்சரவை மாற்றப்படுகையில் அண்ணாமலைக்கு இடமளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாளையே இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
News April 18, 2025
கதாநாயகனாக களமிறங்கும் விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவியில் கலக்கி வரும் பாலா தற்போது தமிழ் திரையுலகில் கலக்கப்போகிறார். தொகுப்பாளராக செயல்பட்டு வரும் பாலா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இப்போது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரீஃப்பின் புதிய படத்தில் அவர் நாயகனாக களமிறங்குகிறார். படத்தின் போஸ்டரை ராகவா லாரன்ஸ் X -தளத்தில் வெளியிட்டுள்ளார்.