News June 28, 2024
திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு: எல்.முருகன்

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்பி ஆர்.கே.செளத்ரி தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், அரசு நிர்வாகத்தில் செங்கோலின் பங்கு குறித்து திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளதாகவும், இதை உணர்ந்து தான் பிரதமர் நாடாளுமன்றத்தில் அதை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் தமிழர்களின் பெருமை மிக்க அடையாளம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 17, 2025
Sports Roundup: ரஞ்சியில் தமிழகம் தடுமாற்றம்

*இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பைக்கு, UAE அணி தகுதி. *உலக ஜூனியர் பேட்மிண்டனில் உன்னதி ஹூடா, காலிறுதிக்கு தகுதி. *புரோ கபடி லீக்கில், பாட்னா பைரேட்ஸ் அணி டை பிரேக்கரில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. *ரஞ்சி கோப்பையில் ஜார்க்கண்டுக்கு எதிரான மோதலில் தமிழகம் 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாற்றம். *டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் சாத்விக், சிராக் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்.
News October 17, 2025
ராசி பலன்கள் (17.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 17, 2025
கண்துடைப்புக்காக கட்டணம் குறைப்பு: நயினார் நாகேந்திரன்

தீபாவளிக்காக அனைவரும் ஒரு மாதம் முன்பே டிக்கெட் புக் செய்திருந்த போது, காலங்கடந்து ஆம்னி பேருந்து கட்டணத்தை திமுக குறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதனால் யாருக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முன்னரே திட்டமிட்டு கட்டணத்தை நெறிபடுத்தாதது, திமுக அரசின் திறனில்லாத நிர்வாகத்தையே காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.