News August 30, 2025
NOTE: தூத்துக்குடியில் இன்று எங்கெல்லாம் பவர் கட்?

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஆக. 30) பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி, ஸ்ரீவை., சாத்தான்குளம், உடன்குடி, நாசரேத், மஞ்சள்நீர்காயல், நாகலாபுரம், பழனியப்பபுரம் உள்ளிட்ட மின் சரக பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது. எங்கெல்லாம் மின்தடை என விரிவாக தெரிந்துகொள்ள<
Similar News
News August 30, 2025
ஸ்ரீவை. அருகே கோவில் கொடை விழாவில் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன்பண்ணை கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது நடந்த தகராறில் தர்மர் (54) என்பவர் இன்று அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News August 30, 2025
தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.20 லட்சம் சம்பளம்! APPLY NOW

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <
News August 30, 2025
தசரா திருவிழா; சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்குவதால், தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மத்திய அமைச்சர் எல். முருகனிடம் மனு அளித்தார்.