News May 28, 2024
விஜய்யுடன் கூட்டணி சேர விருப்பமில்லை

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் ‘தவெக’ கட்சி குறித்து கேள்வி எழுப்பும்போது எல்லாம் சீமான் வரவேற்று பேசுகிறார். அவருடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு ‘விஜய்யிடம் கேளுங்கள்’ என்கிறார். இதனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. என்றைக்கும் தனித்துப் போட்டி என்ற கொள்கையின் படியே கட்சியை அண்ணன் வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News August 20, 2025
ரஷ்ய கச்சா எண்ணெயால் யாருக்கு லாபம்?

ரஷ்யாவிலிருந்து <<17464064>>மலிவு விலையில்<<>> வாங்கும் கச்சா எண்ணெயால், உண்மையில் பலனடைவது யார்? பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காததால், அதன்மூலம் அரசும், தனியார் நிறுவனங்களும் நேரடியாக லாபமடைகின்றன. மேலும், அதிக விலைக்கு ஏற்ப, வரியும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. தவிர, இந்த எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலிய பொருள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனியார் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கின்றன. மக்களுக்கு?
News August 20, 2025
கூட்டணி சிக்கலில் தவிக்கும் திருமாவளவன்: நயினார்

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிராக எதுவும் பேச முடியாமல் திருமாவளவன் சிக்கலில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன் தனது நண்பராக இருந்தாலும், தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தர விவகாரத்தில் அவரது கருத்து தவறானது என்றார். இதே கருத்தை திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகமும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News August 20, 2025
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக 5 AI படிப்புகள் அறிமுகம்

5 இலவச AI படிப்புகளை மத்திய அரசு ‘ஸ்வயம்’ தளத்தில் வழங்கியுள்ளது. <