News August 25, 2025
10 மாசமா EMI கட்டவில்லை.. ரவி மோகன் பங்களா ஜப்தி?

சென்னை ECR-ல் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்களாவுக்காக பெற்ற கடன் தொகையின் EMI-யை 10 மாதங்களாக அவர் கட்டாததன் காரணமாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரியர் பாய் கொண்டு சென்ற நோட்டீஸை வாங்காமல், வங்கியில் வந்து நோட்டீஸ் பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News August 25, 2025
மருத்துவமனையில் மூத்த தலைவர்.. பரபரப்பு அறிக்கை

ஹாஸ்பிடலில் உள்ள நல்லகண்ணுவை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி விழுந்த மூத்த தலைவர் நல்லகண்ணு(100), தற்போது ராஜீவ் காந்தி GH-ல் சிகிச்சையில் உள்ளார். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர். இதனிடையே, ICU-வில் தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரை, டாக்டர்கள், குடும்பத்தினர் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
News August 25, 2025
தங்க நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி தகவல்

14 காரட், 18 காரட் தங்க நகைகளை 22 காரட் எனக் கூறி வணிகர்கள் விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்படாத வணிகர்கள் ஹால்மார்க் முத்திரையில் மோசடி செய்கிறார்களாம். நகை வாங்குபவர்கள் BIS CARE ஆப்பில் வணிகர்களின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை பரிசோதிப்பது நல்லது. இதன்மூலம், தரமான நகை வாங்குவதை உறுதி செய்யலாம். (14 காரட்டில் 58.5%, 18 காரட்டில் 75%, 22 காரட்டில் 91.6% தங்கம் இருக்கும்) SHARE IT.
News August 25, 2025
மீண்டும் ஒடிசா அரசியலில் VK பாண்டியன்..!

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நவீன் பட்நாயக்குடன் VK பாண்டியன் இணைந்திருப்பது ஒடிசா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. மும்பை ஹாஸ்பிடலில், நவீன் பட்நாயக்கை VK பாண்டியன் உடன் இருந்து கவனித்துக் கொண்டுள்ளார். தற்போது, அவர் புவனேஸ்வர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், VK பாண்டியன்தான் கவனித்து வருகிறார். இது பிஜு ஜனதாதளம்(BJD) மூத்த தலைவர்கள் சிலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம்.