News April 10, 2024
திருமணத்தை தெரிவிக்க மனதளவில் தயாராக இல்லை

திருமணத்தை ரகசியமாக வைக்க நினைத்ததில்லை என நடிகை டாப்சி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “என் திருமணம் குறித்து தெரிவிப்பதற்கு, மனதளவில் தயாராக இல்லை. என் சகோதரி தான் திருமண ஏற்பாட்டை செய்தார். திருமணம் பற்றி எந்த கோரிக்கையையும் அவரிடம் கூறவில்லை. அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். திருமணத்திற்கு குறைவானவர்களே வந்ததால், எந்த விதமான அழுத்தமும் ஏற்படவில்லை” எனக் கூறினார்.
Similar News
News April 24, 2025
பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர் கிடையாது: BCCI

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர் நடத்தணும் என தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வந்தன. இந்த தொடரை நடத்துவது குறித்தான பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழலில்தான் பஹல்காம் சம்பவம் இந்தியர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து, இனி பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர் கிடையாது என BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
எப்படி இருக்கிறது கேங்கர்ஸ்? Review & Rating!

மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாறுவேஷத்தில் வரும் சுந்தர்.சி, என்ன செய்கிறார் என்பதே கதை. ப்ளஸ்: வடிவேலுவின் காமெடிதான் மேஜர் ப்ளஸ் பாய்ண்ட். இயக்குநர், நடிகர் என முத்திரை பதித்துள்ளார் சுந்தர்.சி. தனக்கே உரித்தான பாணியில் பக்கா கமர்சியல் படத்தை கொடுத்து அசத்தியுள்ளார். ஒளிப்பதிவு, பாடல்கள் படத்திற்கு பக்கபலம். பல்ப்ஸ்: லாஜிக் மீறல், கொஞ்சம் போரான பிளாஷ்பேக். Rating: 2.5/5
News April 24, 2025
ரேஷன் கடைகளில் காலியிடம் நிரப்பப்படும்: அமைச்சர்

ரேஷன் கடைகளில் கட்டுநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கிராமங்களில் 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து பொருள் வழங்கப்படும் என்றும் கூறினார்.