News April 4, 2025
தலைவர் போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லையென அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத் தலைவருக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று EPS கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியிருக்கிறார்.
Similar News
News November 7, 2025
பிஹார் தேர்தலில் புதிய சாதனை.. 64.66% வாக்குப் பதிவு!

பிஹாரில் முதற்கட்டமாக நடந்த 121 தொகுதிகளுக்கான தேர்தலில், 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதை விட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக EC தெரிவித்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.
News November 7, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா: டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தக உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் கூடுதல் வரி விதித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி அழைப்பின் பேரில் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 7, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை வெளுக்கப் போகுது

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நவ.15-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IMD தகவலின்படி இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையுடன் செல்லுங்கள்.


