News September 6, 2025
அதிமுக நலனுக்கு நல்லதல்ல: சசிகலா

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்த அவர், இது கட்சியின் நலனுக்கு உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
Similar News
News September 6, 2025
BREAKING: சீனாவை பந்தாடிய இந்தியா… பைனலில் நுழைந்தது

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீன அணியை துவம்சம் செய்தது. ராஜ்கிர் நகரில் நடந்த போட்டியின் ஆரம்பத்திலேயே அமரக்களமாக தொடங்கிய இந்திய முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் மேலும் 4 கோல் அடித்து பைனலுக்கு தகுதிபெற்றது. நாளை (Sep 07) இறுதிப்போட்டியில் தென்கொரியாவுடன் மோதுகிறது டீம் இந்தியா. வாழ்த்தலாமே.
News September 6, 2025
BREAKING: அதிமுகவில் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்த EPS-ன் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று ஒரேநாளில் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல நிர்வாகிகள் தனித்தனியாக கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வருகிறார்களாம்.
News September 6, 2025
காலிஸ்தான் தீவிரவாதம்: ஒப்புக்கொண்ட கனடா

காலிஸ்தான் இயக்கங்கள் கனடாவில் தீவிரவாத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை அந்நாடு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு நிதித்துறை அறிக்கையில், காலிஸ்தான், பாபர் கால்சா உள்ளிட்ட இயக்கங்கள் வெளிநாட்டு வாழ் மக்களிடமும், NPO-க்களிடமும் பணம் வசூல் செய்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ட்ரூடோவால் சீர்கெட்ட இருநாட்டு உறவில், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.