News March 26, 2024
எல்லோராலும் தோனி போல் ஆக முடியாது

தோனியை போல எல்லோராலும் 7ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி மேட்ச்சை ஃபினிஷிங் செய்ய முடியாது என்று முகமது ஷமி கூறியுள்ளார். GT அணிக்கு எதிரான போட்டியில் MI அணி 7ஆவது ஆட்டக்காரராக பாண்டியா களமிறங்கியது குறித்து பேசிய முகமது ஷமி, “தோனி அல்லது கோலி இடத்தில் மற்றவரை ஒருபோதும் பொருத்த முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்கள் திறமையை அடிப்படையாக வைத்து விளையாட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Similar News
News November 5, 2025
‘Sorry அம்மா.. நான் செத்துப் போறேன்’

CA தேர்வில் தோல்வியடைந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த அகில் வெங்கட கிருஷ்ணா (29) என்ற மாணவர், தனது பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நான் உங்களை ஏமாற்றிவிட்டேன். இனி நான் வாழத் தகுதியற்றவன், என்னை மன்னித்து விடுங்கள்’ என கடிதம் எழுதி எழுதியுள்ளார். பின்னர், நேற்று இரவு முகத்தில் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொண்டு ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.
News November 5, 2025
வாக்கு திருட்டில் ஈடுபட்டாரா பாஜக நிர்வாகி?

உ.பி அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் இருக்கும் தால்சந்துக்கு ஹரியானா & உ.பி என 2 மாநிலத்திலும் வாக்குகள் உள்ளது என்பதை ராகுல் அம்பலப்படுத்தியுள்ளார். தால்சந்தின் மகன் யஷ்வீருக்கும் உ.பி மதுராவிலும் ஹரியானாவில் ஹோடல் தொகுதியிலும் வாக்கு இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதேபோல ஆயிரக் கணக்கானோருக்கு உ.பி, ஹரியானா என 2 மாநிலங்களிலும் வாக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
ஒரு வீட்டில் 501 வாக்காளர்களா? கேள்விகளை அடுக்கிய ராகுல்

2-க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் EC-யிடம் உள்ள நிலையில், அதை ஏன் பயன்படுத்தவில்லை என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். EC வேண்டுமென்றே இவற்றை சரிபார்க்கவில்லை என்ற அவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொய் சொல்வதாக குற்றம்சாட்டினார். ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக பதிவில் இருக்க, அங்கு சென்று பார்த்தால் யாரும் இல்லை எனவும் தெரிவித்தார்.


