News March 1, 2025
போதிய வாய்ப்பில்லை…. ஜோதிகா வருத்தம்

குழந்தை பெற்ற பின் தனக்கு படங்களில் நடிக்க போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என ஜோதிகா வருத்தம் தெரிவித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்தபின் நடிப்பதை குறைத்து கொண்ட அவர், அண்மைக்காலமாக மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜாேதிகா, பாலசந்தர் போன்று பெண்களை மையமாக வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் தற்போது இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
Similar News
News March 2, 2025
நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் அமைதியான உறக்கம் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும்.
News March 2, 2025
தூக்கத்திலேயே உயிரிழந்த 5 பேர்

மரணம் எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது. ஆனால், சில மரணங்கள் மிகவும் துயரம் தருபவை. பஞ்சாபில், தரன் தரன் மாவட்டத்தில், ஒரு குக்கிராமத்தில், 3 டீன் ஏஜ் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தனர் கோபிந்தா சிங்- அம்ரித் தம்பதி. அதிகாலை 4:30 மணி அளவில், பழுதடைந்த மேற்கூரை மீது வைக்கப்பட்டிருந்த பாரம் தாங்காமல், திடீரென கூரை இடிந்து விழுந்ததில் மொத்த குடும்பமும் பலியாகியுள்ளனர். சாவு இப்படியா வரணும்?
News March 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!