News August 14, 2024
அண்ணாமலைக்கு தகுதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவின் ஆயுளை நிர்ணயிக்கும் அதிகாரம் மக்களுக்கு உள்ளதே தவிர, அண்ணாமலைக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், அதிமுகவின் எதிர்காலத்தை பற்றி பேச அண்ணாமலை எத்தனை ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் இருக்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, அதிமுக இறுதி நாள்களை எண்ணி வருவதாக அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
Similar News
News December 19, 2025
புத்தாண்டு பரிசாக கேஸ் சிலிண்டர் விலை குறையலாம்!

புத்தாண்டு பரிசாக ஜன.1 முதல் கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை பெருமளவில் குறையாமல் உள்ளது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு இல்லை என்பதால், கேஸ் விலையில் இருந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
News December 19, 2025
CM ஸ்டாலின் தொகுதியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்களும், DCM உதயநிதியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். EPS-ன் எடப்பாடியில் 26,375 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நயினாரின் நெல்லை தொகுதியில் 42,119 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
திமுகவால் ’MGR’ பெயர் நீக்கப்பட்டது: தம்பிதுரை

ராஜ்யசபாவில் VB-G RAM G மசோதா விவாதத்தில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, MGR பெயர் இருக்கக்கூடாது என்ற திமுகவின் யோசனையால் ‘MGNREGA’ என காங்., பெயர் வைத்ததாக சாடினார். முதலில் ‘Mahatma Gandhi Rural Employment Guarantee act’ என்றே பெயர் சூட்டப்பட்டது என்ற அவர், இதன் சுருக்கம் ‘MGR’ என வருவதால், அதில் ‘National’ சேர்க்கப்பட்டு ‘Mahatma Gandhi National Rural Employment’ என மாற்றப்பட்டது என்றார்.


