News June 2, 2024
திமுக அல்ல, அதிமுகவே பாஜகவின் குறி?

வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றபோது, 1 வாக்கு வித்தியாசத்தில் அரசு கவிழ்ந்தது. அதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது. இதை ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் மனதில் வைத்திருப்பதாகவும், ஆதலால் திமுக மீது பாஜகவுக்கு ஒருவித சாப்ட் கார்னர் உண்டென்றும், அதிமுகதான் பாஜகவின் குறி, அக்கட்சிக்கு பதிலாக மாற்று சக்தியாக உருவெடுப்பதுதான் பாஜக திட்டம் எனச் சொல்லப்படுகிறது.
Similar News
News September 20, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலகலா?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்பது என கே.எஸ்.அழகிரி கூறியதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது, மறைமுகமாக தவெகவுடன் காங்., செல்வதற்கான சமிக்ஞை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்க நெருக்க, இதுபோன்ற கருத்துகள் வலுவடையும் என்றும், விஜய் உடன் காங்., நெருக்கமாக இருப்பதால் கடைசி நேரத்தில் கூட காங்., TVK பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
News September 20, 2025
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

காலையில் வீட்டை சுத்தம் செய்து, சொம்பு ஒன்றில் நாமமிட்டு துளசி மாலையை சுற்றி, அதில் சிறிது நேரம் அரிசியை போட்டு, பெருமாள் படத்தின் முன் வைக்கவும். இந்த அரிசியில்தான், பூஜைக்கும் பயன்படுத்த வேண்டும். நைவேத்தியமாக புளி சாதம், சர்க்கரை பொங்கல், வடை படைக்கலாம். துளசி தீர்த்தம் & மாவிளக்கு கட்டாயம். பூஜை செய்யும் போது, வீட்டில் அனைவரும் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். SHARE IT.
News September 20, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.