News March 26, 2025
இல்லவே இல்லை; டென்ஷனான இபிஎஸ்!

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இபிஎஸ் சற்று பதற்றமானார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் ஊடகங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக, இப்படி கேட்பதா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறும் எனவும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கமளித்தார்.
Similar News
News November 22, 2025
தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன்(92) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு சென்னிமலையில் பிறந்த அவர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள அவர், தமிழில் எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். RIP
News November 22, 2025
கர்ப்பிணிகளுக்கு முற்றிலும் இலவசம்..!

பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்லும் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல ஊர்தி சேவை திட்டத்தின் கீழ் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. அரசு ஹாஸ்பிடலில் பிரசவம் பார்த்தால் மட்டுமே இந்த சேவை கிடைக்கும். அந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு செல்ல சேவை வழங்கப்படாது. இந்த சேவையை பெற, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது 102 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அவசர நேரத்தில் உதவும் SHARE THIS.
News November 22, 2025
TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது: அன்புமணி

சேலத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆளும்கட்சி நிர்வாகியே சுட்டுக்கொலை செய்யப்படும் அளவுக்கு TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக கூறியுள்ள அவர், தமிழக மக்களுக்கு என்னதான் பாதுகாப்பு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.


