News April 19, 2024
தேர்தல் அல்ல; நாட்டை காக்கும் போராட்டம்

2024 மக்களவைத் தேர்தல் என்பது சாதாரண தேர்தல் அல்ல; நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பதற்கான போராட்டம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், “வேலைவாய்ப்பு சந்தைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையே மோடி அரசு ஒரு தடையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News November 11, 2025
ஏன் இது தொடர்கதையாகி விட்டது?

IPL அணிகள் தொடர்ந்து, தங்களுக்கு கணிசமான பங்களிப்பை அளித்த வீரர்களை கைவிட்டு விடுகின்றன. RCB கெயிலை, DC பண்டை, CSK ரெய்னாவை, RR பட்லரை, SRH வார்னரை என இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2024-ல் கோப்பையை வென்ற ஷ்ரேயஸ் ஐயரை, அதே ஆண்டில் KKR கைவிட்டது. அதன் தொடர்ச்சி தான், ஜடேஜாவை CSK கைவிட்டதாக கூறப்படும் செய்தியும். இது ஏன் தொடர்கதையாக உள்ளது என்ற கேள்வி எழாமல் இல்லை. நீங்க என்ன சொல்றீங்க?
News November 11, 2025
T.R.பாலுவிடம் அண்ணாமலை இன்று குறுக்கு விசாரணை

DMK Files என்ற பெயரில் திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை அவதூறு பரப்பியதாக ₹100 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு மான நஷ்ட வழக்குத் தொடுத்தார். இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்யவுள்ளார்.
News November 11, 2025
நேற்று மீண்டு, இன்று வீழ்ந்த பங்குச்சந்தைகள்!

கடந்த வாரத்தில் சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் நேற்று மீண்டு வந்த நிலையில், இன்று சரிவைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 168 புள்ளிகள் சரிந்து 83,367 புள்ளிகளிலும், நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளிலும் தற்போது வர்த்தகமாகின்றன. HDFC Bank, Bajaj Finance, Tata Steel உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.


