News August 16, 2024
10 நாள்களில் ஒரு “டூவீலர்” விபத்து கூட இல்லை

சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் முதல்முறையாக 10 நாள்களில் ஒரு இருசக்கர வாகன விபத்து கூட நடைபெறாதது தெரிய வந்துள்ளது. சுமார் 45 லட்சம் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், மொத்த விபத்துகளில் 45% அவையே காரணமாக இருந்தன. இந்நிலையில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் மேற்பார்வையில் போக்குவரத்து போலீஸ் எடுத்த விழிப்புணர்வால் விபத்து நடைபெறாதது புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
Similar News
News November 19, 2025
பக்தர்களுக்கு மலையேற்றம் உண்டா? எ.வ.வேலு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையில் ஏற அனுமதி உண்டா என பக்தர்களுக்கு குழப்பம் உள்ளது. இந்நிலையில், தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் என அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 524
▶குறள்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
▶பொருள்: தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.
News November 19, 2025
கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.


