News August 6, 2025
ஒரு ரூபாய் செலவில்லை… இலவச மருத்துவ ஆலோசனை

மத்திய அரசின் தொலைதூர மருத்துவ சேவை தான் இ-சஞ்சீவனி (esanjeevani.in) திட்டம். இதன்மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தொலைபேசி / வீடியோ கால் அழைப்பு மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனையுடன் டாக்டர் இ-பிரிஸ்கிரிப்ஷனும் கொடுப்பார். இதை பார்மஸியில் காட்டி மருந்துகளும் வாங்கலாம். ஆயுர்வேத டாக்டர்களிடமும் ஆலோசனை பெறலாம்.
Similar News
News August 6, 2025
படுக்கைக்கு முன் தம்பதிகள் செய்ய வேண்டியவை ❤️

❤️முடிந்தவரை இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் ❤️பார்ட்னருக்கு உணவை பரிமாறுங்கள். ❤️சாப்பிடும்போது பார்ட்னரின் சமையலை பாராட்டுங்கள் ❤️எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாடுங்கள் ❤️ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள் ❤️சாப்பிட்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு வாக் செல்லுங்கள் ❤️நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டுங்கள் ❤️ஒரு நாளைக்கு 5 முறையேனும் ஐ லவ் யூ சொல்லுங்கள். உங்க ஐடியாவையும் கமென்ட் பண்ணுங்க.
News August 6, 2025
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா?

‘குட் நைட்’ படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பலரை அவர்கள் தேடிய நிலையில், தற்போது ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி செய்தது போல் வித்தியாசமான முயற்சியை ஆர்யா மேற்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
News August 6, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது

இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆக.15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து சனி, ஞாயிறு (ஆக.16 & 17) என பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், பலரும் சொந்த ஊருக்கு செல்ல பலரும் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க புக் பண்ணீட்டீங்களா?