News November 25, 2024

PBKSல் ஒரு நல்ல அனுபவம் கூட இல்லை: Ex CSK வீரர்

image

IPL ஏலம் நடைபெற்று வரும் நேரத்தில், PBKS அணி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணப்பா கவுதம். அவர் இது குறித்து பேசும் போது, PBKSல் எனக்கு நல்ல அனுபவம் இருந்ததில்லை எனக் குறிப்பிட்டு, அது கிரிக்கெட் பற்றியது மட்டுமல்ல என்றார். அணியை தாண்டி மற்ற பிற விஷயங்களும் உள்ளன என்றவர், அவர்கள் ஒரு கிரிக்கெட் வீரராக என்னை நடத்தியது முறையற்றது என்றும் புகார் கூறினார்.

Similar News

News August 21, 2025

பொங்கல் பரிசு ₹5,000 வழங்க தமிழக அரசு முடிவு?

image

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 வழங்க TN அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நிதியை திரட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். 2021 தேர்தல் சமயத்தில், இதேபோல் தான் அப்போதைய அதிமுக அரசு ₹2,500 பொங்கல் பரிசு வழங்கியது. கடந்த முறை திமுக அரசில் பொங்கல் தொகை வழங்கப்படவில்லை.

News August 21, 2025

2,833 காவலர் பணியிடங்கள்.. TNUSRB அறிவிப்பு

image

2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வெளியிட்டுள்ளது. 631 தீயணைப்பு வீரர்கள், 180 சிறைக் காவலர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பப்பதிவு நாளை (ஆக.22) தொடங்கி செப்.21-வுடன் முடிவடைகிறது. நவ.9-ல் எழுத்துத் தேர்வு நடைபெறும். கல்வித்தகுதி உள்பட மேலும் தகவல்களை அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News August 21, 2025

அதிகாலையிலேயே சரக்கு … சர்ச்சையாகும் தவெக மாநாடு

image

மதுரையில் TVK மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், தவெக மாநாட்டு பந்தலுக்கு அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் அமர்ந்து தவெக தொண்டர்கள் மது அருந்தி கொண்டிருக்கும் PHOTO வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கு வரும்போதே சரக்கு வாங்கிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாநாட்டின் போதும், மாநாட்டு பந்தலிலேயே TVK தொண்டர்கள் மது அருந்தியது சர்ச்சையானது.

error: Content is protected !!