News March 22, 2025
கூட்டாட்சி பரிசு அல்ல, உரிமை: பிஆர்எஸ்

கூட்டாட்சி என்பது பரிசு அல்ல; உரிமை என தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராமராவ் தெரிவித்துள்ளார். உரிமைகளை காக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊக்கமளிக்கிறது என புகழாரம் சூட்டிய அவர், கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்கான பரிசு அல்ல; உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன். அடிப்படை உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்றார்.
Similar News
News March 23, 2025
பிரச்னைகளை திசை திருப்பவே விளம்பர அரசியல்: ஜி.கே.வாசன்

சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை திசைதிருப்பவே, அண்டை மாநில முதல்வர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையரை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போது, தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என எப்படி திமுக அரசுக்கு தெரியும் எனவும், அறிவிக்கப்படாததை ஒன்றை வைத்து திமுக விளம்பர அரசியல் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
News March 23, 2025
தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 23) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் நேற்று முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News March 23, 2025
மெஹுல் சோக்சியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

வங்கியில் ₹13,500 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்சியை நாடு கடத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் தனது மனைவியுடன் தற்போது பெல்ஜியமில் வசித்து வருகிறார். கடனை வாங்கிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறிய சோக்சி, கரிபீயன் தீவுகளில் வசித்ததாக நம்பப்பட்டது. மேலும், தற்போது பெல்ஜியத்தில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.