News May 28, 2024

வடமாநில தீ விபத்துகளும், கற்க வேண்டிய பாடமும்

image

குஜராத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். அதேபோல், டெல்லியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியாகின. 2 விபத்திற்கும் ஆஜாக்கிரதையே காரணம் என கூறலாம். 2 இடங்களிலும் தீயணைப்பு படையிடம் இருந்து உரிய சான்றிதழ் பெறாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்தந்த துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்திருந்தால், விலைமதிப்பற்ற மனித உயிர்களை காத்திருக்கலாம்.

Similar News

News November 26, 2025

செங்கோட்டை – திருவண்ணாமலை சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கார்த்திகை தீப ஜோதி திருவிழாவை பார்த்து திரும்புவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற டிச.2,3ம் தேதிகளில் தேவைக்கேற்ப விரைவு பஸ்கள் இயக்கப்படும். தேவைப்படும் பயணிகள் www.tnstc.in மற்றும் அதன் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News November 26, 2025

சென்னை வந்தடைந்த KAS & ஆதரவாளர்கள்

image

இன்று MLA பதவி ராஜினாமா, நாளை தவெகவில் இணைப்பு என்ற தகவலுக்கு மத்தியில், செங்கோட்டையன் சென்னை வந்துள்ளார். ஏர்போர்ட்டில் தவெகவில் இணைவது பற்றி கேட்டபோதும், அவர் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். மேலும் , அவரது ஆதரவாளர்களில் பலரும் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூம் புக் செய்துள்ளதாகவும், இதனால் நாளைய அரசியல் களம் பரபரப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை.

News November 26, 2025

சற்றுநேரத்தில் புயல்: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

இன்னும் சற்றுநேரத்தில் ( மதியத்திற்குள்) ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதேநேரம் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!