News April 29, 2025
உக்ரைனில் வடகொரியர்கள்.. ஒப்புக்கொண்ட கிம்!

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் சண்டையிடுவதை அந்நாடு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் வசம் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தை மீட்க ரஷ்ய வீரர்களுக்கு உதவுவதாகவும், அங்கு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் எனவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 14,000 வடகொரிய வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
ஏப்ரலில் சவரனுக்கு ₹3,760 உயர்ந்த தங்கம்!

தங்கம் விலை இம்மாதம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் (28 நாள்களில்) கிடுகிடுவென உயர்ந்து இன்று (ஏப்.29) ஒரு சவரன் ₹71,840-ஆக விற்பனையாகிறது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. நாளை(ஏப்.30) அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லியில் PM மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23-ம் தேதி நடந்த இக்கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றம், எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 5 நாள்களாக எல்லையில் பரபரப்பு நிலவும் நிலையில், நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
News April 29, 2025
அண்ணாமலைக்கு ‘நோ’ எம்.பி. பதவி.. காரணம் இதுதான்!

TN பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு அதிகாரமிக்க பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். <<16247938>>ஆந்திராவில் <<>>இருந்து ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டு பின்னர் மத்திய அமைச்சரவையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தானாம். அவர் TN அரசியலில் தீவிரம் காட்ட விருப்பம் தெரிவித்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.