News March 19, 2024
வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி தேதி மார்ச் 30 ஆகும்.
Similar News
News December 9, 2025
முடி அடர்த்தியா வளர இந்த 2 பொருள்கள் போதும்

ஒருவரின் முக அழகை மெருகேற்றுவது முடியாக தான் இருக்கிறது. இதனால் அதீத முடி உதிர்வால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்ய 2 பொருள்கள் போதும். முட்டை & தயிரில் புரதம், பையோட்டின் அதிக அளவில் இருப்பதால் முடி சார்ந்த பிரச்னைகளை இது சரி செய்கிறது. இதற்கு, வாரத்திற்கு இருமுறை முட்டையின் வெள்ளைக் கரு & ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து ஹேர் பேக் போட்டுவந்தால் முடி அடர்த்தியாக வளரும். SHARE.
News December 9, 2025
காதலியின் சர்ச்சை போட்டோ.. கொந்தளித்த ஹர்திக்

தனது காதலி மஹிகா சர்மாவை ஆபாசமாக போட்டோ எடுத்த புகைப்பட கலைஞர்களை ஹர்திக் பாண்ட்யா கடிந்து கொண்டுள்ளார். பரபரப்புக்காக மலிவான செயலில் ஈடுபடுவது சரியல்ல என்றும், புகைப்பட கலைஞர்கள் பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் சிலர் மஹிகா சர்மாவை சாடினாலும், ஆடை சுதந்திரம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
News December 9, 2025
ராஜீவ் காந்தி – சோனியா.. நீங்கா நினைவுகள் PHOTOS

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின், சோனியா காந்தியின் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. இத்தாலியில் பிறந்த அவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று, 2 முறை காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினார். இன்று அவரது 79-வது பிறந்த நாளில், ராஜீவ் காந்தியுடன் இருக்கும் சில மறக்க முடியாத போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


