News November 20, 2024
ஆவணப்படத்திற்கு NOC: நன்றி சொன்ன நயன்தாரா!

தனது ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்த NOC தந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். நவ.18ல் வெளியான அந்த ஆவணப்படத்தில், அவர் நடித்த பல்வேறு படங்களில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், நானும் ரவுடி தான் படக்காட்சியை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை. இந்நிலையில், தனுஷ் பெயரை தவிர்த்து மற்ற அனைத்து படத் தயாரிப்பாளர்களின் பெயரையும் குறிப்பிட்டு நயன் நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
திருமா கருத்துக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாகக் கூடாது என்ற திருமாவளவன் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை ஆதரிப்பது தவறு என்றும், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கக் கூடாது என்று சொல்வது அதிமேதாவித்தனம், அற்பத்தனம், அரைவேக்காடு தனம், கொத்தடிமையிலும் கொத்தடிமைத்தனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 20, 2025
கமலுக்கு ஓகே, ரஜினிக்கு முடியாது: AR முருகதாஸ்

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘கூலி’ படம் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகிறது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய AR முருகதாஸ், ரசிகர்கள் சில எதிர்பார்ப்புகளுடன் உள்ளதாக கூறினார். ரஜினிக்கான மாஸ் குறையாமல், லோகேஷ் திரைக்கதையில் படம் வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். லோகேஷின் திரைக்கதையை கமலுக்கு ஃபிட் செய்யலாம், ஆனால் ரஜினிக்கு அதைச் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
News August 20, 2025
குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு இன்று (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.