News October 7, 2025
BREAKING: 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க் (UK), மைக்கேல் டிவோரெட்(FRANCE), ஜான் மார்ட்டினிஸ்(USA) ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் இயற்பியலில் அவர்களின் பங்களிப்புக்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மின் சுற்றுகளில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் முறையில் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டை கண்டுபிடித்துள்ளனர்.
Similar News
News October 7, 2025
கரூர் சம்பவத்தை தினமும் பேசாதீங்க: கமல்ஹாசன்

கரூர் உயிரிழப்பு என்பது சோகம் தான், ஆனால் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் சோகம் அகலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோவில் சிகிச்சையில் உள்ள ராமதாஸ், வைகோ ஆகியோரிடம் உடல்நலம் விசாரித்த கமல், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரூர் சம்பவம் பற்றி தினமும் பேச வேண்டாம் என்ற அவர், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதில் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார்.
News October 7, 2025
கன்னட பிக்பாஸுக்கு சிக்கல்

கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் செட் அமைந்துள்ள இடத்தை மூட கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Vels ஸ்டூடியோ மற்றும் Entertainment பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற தவறியதாக KSPCB அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 7, 2025
விஜய்க்கு நேரில் செல்ல பயம்: துரைமுருகன்

கரூர் துயர் நடந்து 10 நாள்களுக்கு மேலான நிலையில், இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய துரைமுருகன், குற்றம் புரியவில்லையென்றால், தைரியமாக நேரில் சென்றிருக்கலாம், தன் நெஞ்சே தன்னை சுடுவதால் விஜய்க்கு வெளியில் வர பயம் என்று காட்டமாக விமர்சித்தார்.