News October 6, 2025
இதற்காக தான் நோபல் பரிசு

2025ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மேரி பிரங்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சககுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் பாதுகாப்பு அம்சங்கள், T-செல்கள் பற்றிய ஆய்வுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ இம்யூன் நோய், கேன்சர் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும், ஸ்டெம் செல் மாற்றத்துக்கு பின் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் இவர்களின் ஆய்வு உதவும்.
Similar News
News October 6, 2025
விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா? WAY2NEWS சர்வே

கரூர் துயரச் சம்பவத்துக்கு பின், விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா என்பது அரசியலிலும் பொதுவெளியிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பி வே2நியூஸ் ஒரு சர்வே நடத்தியது. லட்சக்கணக்கான வாசகர்கள் இதில் வாக்களித்தனர். அதன்படி, சரிபாதி பேர் (50%) விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளது என்றும், 50% பேர் இல்லையென்றும் வாக்களித்துள்ளனர். உங்கள் கருத்து?
News October 6, 2025
அனைத்து ஃபார்மட்களிலும் ஹர்ஷித் ராணா.. ஏன்?

ஆஸி.,க்கு எதிரான டி20, ODI போட்டிகளுக்கான அணியில், ஹர்ஷித் ராணா இடம்பெற்றிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. IPL-ல் KKR-க்காக விளையாடியதால் கம்பீர் அவருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத அவருக்கு, அனைத்து ஃபார்மட்களிலும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஷமி, சிராஜை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
News October 6, 2025
BREAKING: கரூர் சென்றார் கமல்

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, கமல் ஆறுதல் கூற உள்ளார்.