News October 11, 2025
தகுதி இல்லாதவர்களுக்கு நோபல் பரிசு: புடின்

நோபல் பரிசு மீதான நம்பகத்தன்மை போய்விட்டதாக புடின் தெரிவித்துள்ளார். உலகிற்கு ஒன்றுமே செய்யாத நபர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவரா என தீர்ப்பளிக்கும் உரிமை தனக்கு இல்லை, ஆனால் அவர் உலகில் அமைதியை வளர்க்க முயற்சி மேற்கொண்டதாகவும், பல சிக்கலான விஷயங்களை தீர்த்து வைத்திருப்பதாகவும் புடின் பேசியுள்ளார்.
Similar News
News October 11, 2025
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் சிறை (அ) ₹1,000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. மேலும், விதிமீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதத்திற்கு சம்பந்தப்பட்டவரே பொறுப்பு. பயணிகள் சந்தேகத்துக்குரிய பொருள்களை கண்டால் 139 என்ற எண்ணிலோ (அ) RPF, TTE, ரயில் நிலைய அலுவலர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 11, 2025
90 பேருக்கு இன்று கலைமாமணி விருது வழங்கும் CM ஸ்டாலின்

TN அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் 2021, 2022, 2023-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை 90 பேருக்கு CM ஸ்டாலின் இன்று வழங்குகிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், நடிகர்கள் SJ சூர்யா, விக்ரம் பிரபு, நடிகைகள் சாய் பல்லவி, மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோர் விருதுகளை பெற உள்ளனர். மேலும், பாரதியார் விருது, MS சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருதும் வழங்கப்படவுள்ளன.
News October 11, 2025
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. காரணம் என்ன?

தங்கம் விலை நேற்று முன் தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று சவரனுக்கு ₹680 குறைந்தது. இதனால், தற்போதைய நிலவரப்படி சவரன் ₹90,720-க்கு விற்பனையாகிறது. இன்னும் சற்று நேரத்தில் விலை மாற்றம் இருந்தாலும், கடந்த வாரத்தில் இருந்ததைப்போல பெரிய அளவில் இருக்காது என வியாபாரிகள் கூறியுள்ளனர். USD-க்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு, பங்குச்சந்தை உயர்வால் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.