News April 23, 2025
நோவா பட நடிகை திடீர் மரணம்

நோவா, மம்மோத் ஆகிய ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் Sophie Nyweide. இந்நிலையில் 24 வயதே ஆகும் நிலையில், அவர் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஹாலிவுட் பிரபலங்கள் மரணமடைந்து வருவது திரைப்பட ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Similar News
News September 11, 2025
திராட்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

திராட்சைப் பழமாக இருந்தாலும், உலர்ந்த திராட்சையாக இருந்தாலும் ஒரே மாதிரியான மருத்துவ குணங்கள் உள்ளன. தித்திப்புடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு திராட்சை அளிக்கிறது. தொடர்ந்து திராட்சை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் பல நன்மைகளும் கிடைக்கின்றன. அதை பட்டியலிட்டு மேலே போட்டோஸாக வரிசைப்படுத்தியுள்ளோம். Swipe செய்து திராட்சையின் மகிமைகளை அறிந்துகொள்ளுங்கள்.
News September 11, 2025
விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்

தொடர்ச்சியாக விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை, சீமான் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், விஜய் மக்களை சந்திக்கும் பயணத்தையும் சாடியுள்ளார். மக்களை சந்திப்பது என்பது அவர்களுக்கு பிரச்னை ஏற்படும்போது துணை நிற்பதுதான் என அவர் கூறியுள்ளார். ‘Road show’ சென்று வெறுமனே கை காட்டுவது மக்கள் சந்திப்பது இல்லை என்றும், இது வேட்டையாடும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்டும் சிங்கம் எனவும் கிண்டலடித்துள்ளார்.
News September 11, 2025
பைக்குகளின் விலையை குறைத்த ஹோண்டா!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு எதிரொலியாக பல்வேறு கார், <<17669829>>பைக் நிறுவனங்கள்<<>> விலை குறைப்பை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஹோண்டா நிறுவனமும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி தங்களது பைக்குகளின் விலையை ₹18,887 வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மேலே Swipe செய்து பைக்குகளின் விலையை தெரிந்து கொள்ளுங்கள்.