News August 5, 2025

வேலைவாய்ப்பு பற்றி வெள்ளை அறிக்கை இல்லை: EPS

image

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கடந்த அதிமுக அரசு அமைத்த அடித்தளமே காரணமென EPS தெரிவித்துள்ளார். நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 17 அரசு மருத்துவம், 21 பாலிடெக்னிக், 67 கலை அறிவியல் கல்லூரிகளை கடந்த அதிமுக அரசு அமைத்ததாக குறிப்பிட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை திமுக நடத்தியதாகவும், அதன்மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்தது என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றார்.

Similar News

News August 5, 2025

சீன நிறுவனங்களுடன் கைகோர்ப்பா? அதானி மறுப்பு

image

சீன நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் EV பேட்டரி உற்பத்தி ஆலையை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. EV கார் உற்பத்தி நிறுவனமான BYD மற்றும் Beijing Welion New Energy Technology நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும், இந்த தகவல் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துவது என்றும் மறுத்துள்ளது.

News August 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கேள்வி ▶குறள் எண்: 418 ▶குறள்: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. ▶பொருள்: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

News August 5, 2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோ பாதுகாக்கப்படுமா?

image

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வணிக பயன்பாட்டிற்கு கோரும் எந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களும் இதுவரை ஏற்கப்படவில்லை என மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Operation Sindoor’ (அ) ‘Ops Sindoor’ என்ற பெயரில் டிரேட்மார்க் கோரி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!