News April 30, 2025
பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் கூடாது.. அதிரடி உத்தரவு!

மதுரையில் தனியார் நர்சரி பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் சங்கீதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை விடுமுறை நாள்களில் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், TN முழுவதும் வகுப்புகள் நடக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.
Similar News
News November 22, 2025
உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா

ரஷ்ய போர் நிறுத்தத்திற்கு தாங்கள் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்குமாறு உக்ரைனை USA மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணங்க மறுத்தால் ஆயுதங்கள், உளவு தகவல்கள் பகிர்வது நிறுத்தப்படும் என எச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களை கலந்து ஆலோசிக்காமல், இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. USA நிபந்தனைகளின் படி, உக்ரைன் சில பகுதிகளை இழக்க நேரிடும்.
News November 22, 2025
பாஜக ‘P’ டீம்: தமிழிசை

தமிழகத்தின் 2026 தேர்தல் பிஹார் தேர்தல் போல இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். விஜய், ஸ்டாலின் கூறுவது போல பாஜக ஏ டீம், பி டீ எல்லாம் கிடையாது எனவும் நாங்கள் ’P’ டீம், அதாவது People’s Team என்றும் கூறியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க MLA-க்களை பெறும் என்ற அவர், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மாதவிடாய் தள்ளிப்போகிறதா? சிம்பிள் வைத்தியம்

பெண்களே, மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகிறதா? கவலை வேண்டாம். இந்த எளிய விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தாலே இதனை சரி செய்யலாம். ➤மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் ➤பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம் ➤கொத்தமல்லி இலை, விதைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் அருந்தலாம் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க!


